500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் மலேசியாவில் உள்ளன – ‘மன​தின் குரல்’ நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பெருமிதம்!!

புதுடெல்லி:
“நமது இந்தியச் சமூகம் மலேசியாவில் கலாச்சாரம், பண்பாட்டை போற்றி வருகின்றனர். அங்கு 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன” என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

‘மன​தின் குரல்’ (மன் கி பாத்) 130-வது வானொலி நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி நேற்று உரை​யாற்​றிய​தாவது: எனதருமை நாட்டு மக்​களே… நாளை 26-ம் தேதி இந்​தி​யா​வின் 77-வது குடியரசு தின விழாவை சிறப்​பாகக் கொண்​டாடு​கிறோம்.

இந்த தினத்​தில்​தான் அரசி​யலமைப்​புச் சட்​டம் கொண்டு வரப்​பட்​டது. அரசி​யலமைப்பு சட்​டத்தை உரு​வாக்​கிய பெருந்​தலை​வர்​களுக்கு மரி​யாதை செலுத்​து​வோம்.

இன்​றைய தினம் (ஜன.25) கூட சிறப்பு வாய்ந்த நாள்​தான். இன்​று​தான் தேர்​தல் ஆணை​யம் உரு​வாக்​கப்​பட்​டு, ஆண்​டு​தோறும் தேசிய வாக்​காளர் தின​மாக கொண்​டாடப்​படு​கிறது.

இந்த சிறப்​பான தினத்​தில் 18 வயது நிரம்​பிய முதல் முறை வாக்​காளர்​களுக்கு ஒன்று சொல்​கிறேன். வழக்​க​மாக 18 வயதை அடை​யும் போது வாழ்க்​கை​யில் அது​வும் ஒரு சாதாரண நிகழ்​வாக கருதப்​படு​கிறது. ஆனால், ஒவ்​வொரு இந்​தி​யருக்​கும் இந்த வயது ஒரு மைல்​கல்.

தேர்​தல் ஜனநாயக செயல்​பாடு​களில் முதல் முறை வாக்​காளர்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் பங்​கேற்று வாக்​களிக்க வேண்​டும். இந்​திய ஜனநாயகத்​தின் ஆன்​மா​வாக இருப்​பவர்​கள் வாக்​காளர்​கள்.

நமது இந்​தி​யச் சமூகம் மலேசி​யா​வில் கலாச்​சா​ரம், பண்​பாட்டை போற்றி வரு​கின்​றனர். அங்கு 500-க்​கும் மேற்​பட்ட தமிழ்ப் பள்​ளி​கள் உள்​ளன.

அந்​தப் பள்​ளி​களில் தமிழ்ப் பாடம் கற்​பித்​தல் மட்​டுமன்றி மற்ற பாடங்​களும் தமிழ் மொழிலேயே கற்​பிக்​கப்​படு​கின்​றன. தெலுங்​கு, பஞ்​சாபி போன்ற மற்ற இந்​திய மொழிகளுக்​கும் மலேசி​யா​வில் முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​படு​கிறது.

இந்​தியா – மலேசியா இடை​யில் வரலாற்று ரீதி​யாக, கலாச்​சார உறவு​களை பேணுவ​தில், ‘மலேசிய இந்​திய பாரம்​பரிய சங்​கம்’ முக்​கிய பங்கு வகிக்​கிறது. கடந்த மாதம், மலேசி​யா​வில் ‘லால் பாட் சேலை’ அணிவகுப்பு நிகழ்ச்சி ஏற்​பாடு செய்​யப்​பட்​டது.

இந்​தச் சேலைக்கு நமது வங்க கலாச்​சா​ரத்​துடன் சிறப்​புத் தொடர்பு உண்​டு. இந்த நிகழ்​வு, இந்​தச் சேலையை அதிக எண்​ணிக்​கையி​லான மக்​கள் அணிந்​ததற்​காக மலேசிய சாதனைப் புத்​தகத்​தில் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்​னர் ஸ்டார்ட் அப் இண்​டியா திட்​டத்தை தொடங்கி இன்று உலகள​வில் 3-வது இடத்தை பிடித்​துள்ளோம். அதே​நேரத்​தில் புது​மை, தரம் ஆகிய​வற்​றில் உறு​தி​யாக இருக்க வேண்​டும்.

அப்​போது​தான் நமது தயாரிப்​பு​கள் உலகின் கவனத்தை ஈர்க்​கும். தற்​போது நாட்​டின் பல நகரங்​களில் இளைஞர்களிடம் ‘பஜன் கிளப்’ என்று அழைக்​கப்​படும் இசை நிகழ்ச்சிகள் பிரபல​மாகி வரு​கின்றன.

பக்​திப் பாடல்​களின் புனிதம் கெடா​மல் அவர்​கள் பாடு​வதை கேட்​பது மிக​வும் மகிழ்ச்​சி​யாக இருக்​கிறது.

அடுத்த மாதம் இந்​திய செயற்கை நுண்​ணறி​வின் தாக்​கம் குறித்த மாநாடு நடை​பெற இருக்​கிறது. அடுத்த மாதம் மனதின் குரலில் இந்த மா​நாடு குறித்து பேசுவோம். இவ்​வாறு பிரதமர் மோடி பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *