தமிழகத்தை மத்​திய அரசு தொடர்ந்து மாற்​றாந்​தாய் மனப்​பான்​மை​யுடன் நடத்தி வரு​கிறது என்​பதை வெட்​ட​வெளிச்​ச​மாக்கி இருக்​கிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!!

சென்னை:
மத்​திய நிதி​நிலை அறிக்​கை​யில் தமிழகத்​துக்​கான எந்த முக்​கிய திட்​டங்​களும் இடம்​பெறாதது ஏமாற்​றம் அளிக்​கிறது என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக நேற்று தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​துக்கான சட்​டப்​பேரவை தேர்​தல் நெருங்கி வரும் வேளையில், இந்த ஆண்​டாவது மத்​திய பாஜக அரசின் கண்​களுக்கு தமிழகம் தெரி​யும்.

அவர்​களது காதுகளில் நமது உரிமைக்​குரல் விழும் என்று எதிர்​பார்த்​திருந்​தோம். அந்த எதிர்​பார்ப்பை பொய்க்​கச் செய்​து, ஏமாற்​றத்தை வழங்கி​யிருக்கிறது மத்​திய பாஜக அரசு.

மத்​திய நிதி அமைச்​சர், நாடாளு​மன்​றத்​தில் சமர்ப்​பித்த 2026-27-ம் ஆண்​டுக்​கான நிதி​நிலை அறிக்​கை​யில், தமிழகத்​தின் நலன் முற்​றி​லு​மாக புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளதோடு, ஏழைகள்- பெண்​கள்- விவ​சா​யிகள்- விளிம்பு நிலை மக்​கள் என எந்த பிரி​வினருக்​கும் நன்மை பயக்​கும் முக்​கிய திட்​டங்​கள் இதில் இடம்​பெற​வில்​லை.

மாநிலங்​களுக்​கான வரிப்​பகிர்வு முறை​யில், தமிழகம் உள்​ளிட்ட வளர்ச்​சி​யடைந்த மாநிலங்​களை மத்​திய அரசு தொடர்ந்து புறக்​கணித்து வரு​கிறது என்ற கருத்​தை, நாம் வலு​வாக முன்​வைத்து வரு​கிறோம்.

மொத்த வரி வரு​வா​யில் மாநிலங்​களுக்கு பகிர்ந்​தளிக்​கப்​படும் பங்கு 41 விழுக்​காட்​டிலிருந்து 50 விழுக்​கா​டாக உயர்த்​தப்​பட வேண்​டும் என தமிழகம் உள்​ளிட்ட பல்வேறு மாநிலங்​களின் கோரிக்கை இம்​முறை​யும் புறக்​கணிக்​கப்​பட்​டு, மாநிலங்​களுக்​கான வரிப்​பகிர்வு தொடர்ந்து 41 விழுக்​காடு என்ற அளவிலேயே தொடரும் என்று அறிவிக்​கப்​பட்​டிருப்​பது மிகுந்த ஏமாற்​றத்​தையே தரு​கிறது.

இந்த நிதி​நிலை அறிக்​கை​யில் தமிழகத்​தின் நலன் குறித்த திட்​டங்​கள் இடம்​பெறும் என்று நாம் ஆவலோடு எதிர்​பார்த்து கொண்​டிருந்த வேளை​யில், புதிய திட்​டங்​கள் ஏதும் இடம்​பெற​வில்​லை.

மும்​மொழி கொள்​கையை கடைப்​பிடிக்​காததன் காரண​மாக அனை​வருக்​கும் கல்வி திட்​டத்​துக்​கான ரூ.3,548 கோடி, ஜல் ஜீவன் திட்​டத்தை நாட்​டிலேயே நாம் சிறப்​பாக செயல்​படுத்​திய போதி​லும் மத்​திய அரசு இன்​னும் விடுவிக்​காத நிதி ரூ.3,112 கோடி நிதி குறித்து எந்த அறி​விப்​பும் இல்​லை.

இது​மட்​டுமின்றி தமிழகத்​துக்கு என புதிய திட்​டங்​கள் எது​வும் இந்த நிதி​நிலை அறிக்​கை​யில் இல்லை என்​பது தமிழகத்தை மத்​திய அரசு தொடர்ந்து மாற்​றாந்​தாய் மனப்​பான்​மை​யுடன் நடத்தி வரு​கிறது என்​பதை வெட்​ட​வெளிச்​ச​மாக்கி இருக்​கிறது.

வழக்​க​மாக மத்​திய நிதி​யமைச்​சர் வழங்​கும் நிதி​நிலை அறிக்​கை​யில் இடம்​பெறும் திருக்​குறளும் இந்த முறை இடம்​பெற​வில்​லை. தமிழகத்​துக்​கான எந்த முக்​கிய திட்​டங்களும் இடம்​பெற​வில்​லை. மொத்​தத்​தில் ஏமாற்​றம். ஏமாற்​றம். ஏமாற்​றம். இவ்​வாறு அவர் தெரிவித்​துள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *