சிறுசேரி சிப்காட் தொழில்​நுட்ப பூங்கா வளாகத்​தில் உள்ள நாவலூர் ஏரியில் ரூ.30 கோடி செல​வில் தூர்​வாரப்​பட்டு அமைக்​கப்​பட்​டுள்ள சிப்காட் சுற்​றுச்​சூழல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

சென்னை:
சிறுசேரி சிப்காட் தொழில்​நுட்ப பூங்கா வளாகத்​தில் உள்ள நாவலூர் ஏரியில் ரூ.30 கோடி செல​வில் தூர்​வாரப்​பட்டு அமைக்​கப்​பட்​டுள்ள சிப்காட் சுற்​றுச்​சூழல் பூங்​காவை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: இந்​தி​யா​விலேயே பெரிய பொருளா​தார வளர்ச்​சி மிக்க மாநில​மாக தமிழகம் விளங்கி வரு​கிறது. தமிழக தொழில் துறை​யானது அனை​வருக்​கும் பயனளிக்​கும் சமச்​சீ​ரான வளர்ச்​சியை உறு​தி​செய்​து, பரவலான முதலீடு​களை ஈர்ப்​ப​தில் தனி கவனம் செலுத்தி வரு​கிறது.

லட்சம் பேருக்கு வேலை: அந்த வகை​யில், சிறுசேரி சிப்காட் தகவல் நுட்ப பூங்கா வளாக​மானது 782.51 ஏக்​கர் பரப்​பள​வில் 2002-ம் ஆண்டு ஏற்​படுத்​தப்​பட்டு செயல்​பட்டு வரு​கிறது. இந்​தத் தகவல் தொழில்​நுட்​பப் பூங்கா சுமார் ஒரு லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பை வழங்​கி​யுள்​ளதுடன், சுமார் ரூ.14,000 கோடி முதலீட்​டை​யும் ஈர்த்​துள்​ளது.

இந்த பூங்கா மற்​றும் அதன் சுற்​றுப்​புறங்​களின் நிலைத்​தன்​மையை உறுதி செய்​யும் ஒரு முனைப்​புடன், சிப்காட் நிறு​வனம் 33.43 ஏக்​கர் பரப்​பள​வில் அமைந்​துள்ள நாவலூர் ஏரியைத் தூர்​வாரி, கரைகளைப் பலப்​படுத்தி புனரமைத்​தும், பூங்​காக்​கள், புல்​வெளி​களு​டன் கூடிய நடைப​யிற்சி மற்​றும் சைக்​கிள் ஓட்​டும் பாதைகளை அமைத்​தும், ரூ.30 கோடி செல​வில் சுற்​றுச்​சூழல் பூங்கா உரு​வாக்​கி​யுள்​ளது.

இச்​சுற்​றுச்​சூழல் பூங்​கா, தகவல் தொழில்​நுட்ப பூங்​கா​வில் அமையப் ​பெற்​றுள்ள நிறு​வனங்​களில் பணிபுரி​யும் பணி​யாளர்​கள், பள்​ளிக் கல்​லூரி மாணவர்​கள் மற்​றும் பொது​மக்​கள் பயன்​பெறும் வகை​யில் அமையப் ​பெற்​றுள்​ளது.

இப்​பூங்​காவை நேற்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் திறந்​து​வைத்து பார்​வை​யிட்​டார். இந்​நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் தா.மோ.அன்​பரசன், தலை​மைச்​ செயலர் நா.​முரு​கானந்​தம், தொழில்​துறை செயலர் வி.அருண்​ராய் உள்​ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *