ராணிப்பேட்டை அருகே ரூ.9000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட டாடா கார் தொழிற்சாலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை ;
ராணிப்பேட்டை அருகே ரூ.9000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட டாடா கார் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கப்பட்டது.


பனப்பாக்கத்தில் டாடா நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் சொகுசு கார்கள் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாடா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார்.

இதையடுத்து டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ரேஞ்ச் ரோவர் காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டி மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, கார் உற்பத்தி ஆலையில் உள்ள ரத்தன் டாடா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *