சென்னை:
தமிழகத்தில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று நடந்தபட்டமளிப்பு விழாவில் செவிலிய மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 8,834 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநிரந்தர ஆணைகள்வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல் 3,009 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்வழங்கப்பட்டுள்ளன. கரோனா காலத்தில் தற்காலிகமாக பணிநியமிக்கப்பட்ட செவிலியர்களில் மீதமிருந்த 719 பேருக்கு வரும் 13-ம் தேதி ஆணைகள்வழங்கப்படும்.
மேலும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நிதி ஆதாரத்தோடு திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. அதற்கான பணிகள் தற்போது தொடங்கியது. இவ்வாறுஅவர் தெரிவித்தார்.
விழாவில் துறை செயலர் ப.செந்தில்குமார், துணைவேந்தர் நாராயணசாமி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, இணை இயக்குநர் சங்கர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.