சேலம் சாமியார் 50 ஆபாச வீடியோக்களுடன் கைது!!

சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவருடைய வீட்டின் அருகே உள்ள அய்யனார் கோவில் உள்ளது.

சேலம் போயர் தெருவை சேர்ந்த முத்தையன் என்பவர் அடிக்கடி வந்து வழிபட்டு செல்வார். அது மட்டு

மில்லாமல் பில்லி, சூனியம் எடுப்பது, பெண்களை வசீகரம் செய்வது உள்ளிட்ட வேலைகளையும் சாமியார் வேடம் அணிந்து முத்தையன் செய்வார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் டிரைவருக்கும், முத்தையனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது டிரைவருக்கு பணம் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் தனது 50 சென்ட் நிலத்தை 4 லட்சத்துக்கு முத்தையனிடம் டிரைவர் கிரையம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

நாளடைவில் டிரைவரின் குடும்பத்தினருடன் முத்தையனுக்கு பழக்கம் அதிகமானது. அந்த பழக்கத்தால் நாளடைவில் டிரைவரின் மனைவிக்கும், முத்தையனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இந்த விஷயம் டிரைவருக்கு தெரியவரவே 2 பேரையும் அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு மேல் முத்தையனுடன் பழக்கம் வைத்திருந்தால் நம் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும் என கருதிய டிரைவர், சாமியார் முத்தையனுக்கு தரவேண்டிய பணத்தை வட்டியுடன் தயார் செய்து கொடுத்து விட்டு தனது நிலத்தை திரும்ப தர வேண்டும் என கூறியுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்தையன், உனது நிலத்தை திருப்பி கேட்டால் உன் மனைவியுடன் நான் ஆபாசமாக இருந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என கூறி மிரட்டி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சின்னசேலம் போலீசார் முத்தையனை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. முத்தையனின் மடிகணினியை போலீசார் சோதனை செய்தனர்.

அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த 50-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த 5 செல்போன்கள், ஒரு லேப்டாப், 5 பென்டிரைவ் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து முத்தையனை போலீசார் கைது செய்து, கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *