198 ரன்னுக்கு இந்திய மகளிர் அணி ஆட்டமிழப்பு!!

பெர்த்:
இந்​தியா – ஆஸ்​திரேலியா மகளிர் அணி​கள் இடையி​லான பகலிரவு டெஸ்ட் நேற்று பெர்த்தில் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 62.4 ஓவர்​களில் 198 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஸ்மிருதி மந்​தனா 4, ஷபாலி வர்மா 35 ரன்​களில் வெளி​யேறி​னர்.

பிர​திகா ராவல் 18, கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் 19, தீப்தி சர்மா 7, ரிச்சா கோஷ் 11 ரன்​களில் நடையை கட்​டினர். ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 84 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 52 ரன்​கள் எடுத்த நிலை​யில் லூசி ஹாமில்​டன் பந்​தில் ஆட்டமிழந்​தார்.

ஸ்னே ராணா 5, சாயாலி 7, கிரந்தி கவுடு 1 ரன்​களில் நடையை கட்​டினர். கஷ்வீ கவுதம் 34 ரன்​கள் சேர்த்தார். ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் அனாபெல் சுதர்​லேண்ட் 4, லூசி ஹாமில்​டன் 3, டார்சி பிர​வுன் 2 விக்​கெட்​களை வீழ்த்தினர்.

இதையடுத்து பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 27 ஓவர்​களில் 3 விக்கெட்​கள் இழப்​புக்கு 96 ரன்​கள் எடுத்​தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *