அமராவதி:
ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மின்வாரிய துறை அதிகாரிகள், விபத்து தடுப்பு துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது அமைச்சர் அனிதா ‘ஹீட் வேவ் ஆக்ஷன் பிளான் -2026’ திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசியதாவது:
மத்திய ஆந்திரா, ராயல சீமா மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டே 2026 திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, குழந்தைகள், முதியோர்கள் பாதிக்கப்படாதவாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
தண்ணீர், மோர்ப் பந்தல்கள் அமைப்பது, தண்ணீர் தட்டுப்பாடு, மின் தடை வராமல் கவனமாக இருக்க வேண்டும். மாநிலம் முழுவதும் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.