சிம்புவுக்கு நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம்!!

சென்னை:
சிம்பு நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

’அரசன்’ படத்தினை முடித்துவிட்டு, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் சிம்பு. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் நடைபெற்று வருகின்றன.

இதில் சிம்புவுக்கு நாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. அவருடன் இணைந்து மேலும் சிலரும் சிம்புவுடன் நடிக்கவுள்ளனர்.

பெரும் பொருட்செலவில் இப்படத்தினை தயாரிக்க ஏஜிஎஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

இதில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உறுதி செய்திருக்கிறார். சிம்பு – சந்தானம் கூட்டணி நீண்ட வருடங்கள் கழித்து இதில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இதற்காக சந்தானத்திற்கு பெரும் தொகையினை சம்பளமாக கொடுத்துள்ளது ஏஜிஎஸ் நிறுவனம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *