சென்னை:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 40 புதிய வாகனங்களின் சேவையை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊரக நலப்பணிகள் இயக்ககத்திற்காக வாங்கப்பட்ட புதிய வாகனங்களை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து பயன்பாட்டிற்கு அனுப்பிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, புதிய வாகனங்களின் திறன் மற்றும் செயல்திறனை பரிசோதிக்கும் வகையில், ஒரு வாகனத்தை முதலமைச்சர் விஜய் தாமே இயக்கி பார்த்தார். இந்த நிகழ்வு அங்கு இருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
பின்னர், புதிய வாகனங்களை இயக்கவுள்ள ஓட்டுநர்களுக்கு வாகன சாவிகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்.
இந்த புதிய வாகனங்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் மருத்துவ மற்றும் நலப்பணிகள் மேலும் விரைவாகவும் திறம்படவும் மக்களிடம் சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.