”தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” – உதயநிதி ஸ்டாலின்!!

தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று காலை மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள திடலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை ஆய்வு கூட்டம் நடத்தினார்.

அதில் பங்கேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி துறை சார்ந்த அதிகாரிகளிடம், தமிழக அரசின் விரிவான திட்டங்களையும், திட்டங்களை மக்களிடையே எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும், மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனை வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்டத்தினுடைய சிறப்பு திட்ட செயலாக்க துறை மூலம் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். தற்போது பல்வேறு அரசு அதிகாரிகளுடன் திட்டம் குறித்து ஆய்வு நடத்தினோம்.

கடந்த முறை திட்டங்கள் குறித்து செப்டம்பரில் ஆய்வு நடத்திய தொடர்ந்து இன்று ஆட்சியர் அலுவலகத்தில் கடந்தாண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எந்த அளவு நடைபெற்று வருகிறது.?

எவ்வளவு பணிகள் முடிவுற்றது.? எந்தெந்த பணிகளில் சுணக்கம் உள்ளது குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தோம். அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். எடப்பாடியின் வெள்ளை அறிக்கைக்கு தமிழக முதல்வர் ஏற்கனவே பதிலளித்திருக்கிறார்.

திருப்பி திருப்பி அதையே கேட்டால் என்ன செய்வது.? தேசிய கல்வி கொள்கையை எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இது குறித்து முதல்வர் அதற்கு பதில் அளித்து விட்டார்.

எந்த நேரத்திலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என முதல்வரே கூறிவிட்டார்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *