10 வகுப்பு பொதுத்தேர்வில் 94.31% தேர்ச்சி: மாநிலத்தில் புதுக்கோட்டை முதலிடம்!!

சென்னை:
தமிழ்நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த ஆண்டில் மொத்தமாக 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.

மொத்தம் 4,19,891 மாணவிகளும், 4,01,214 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம் புதுக்கோட்டை – 97.57% சிவகங்கை – 97.54% தஞ்சாவூர் – 97.41% திருச்சி – 97.31% கன்னியாகுமரி – 97.30%

இதில் 97.57 சதவீத தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.

பாடவாரியான தேர்ச்சி சதவீதம் தமிழ் – 98.43% ஆங்கிலம் – 99.44% கணிதம் – 97.36% அறிவியல் – 98% சமூக அறிவியல் – 97.93% முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விவரம் தமிழ் – 34 பேர் ஆங்கிலம் – 94 பேர் கணிதம் – 3,194 பேர் அறிவியல் – 10,476 பேர் சமூக அறிவியல் – 3,336 பேர்.

அதில் குறிப்பாக அறிவியல் பாடத்தில் 10,476 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *