கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 950 பேர் விடுவிப்பு!!

சென்னை:
கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தொடர் போராட்​டம் நடத்​திய தூய்மைப் பணி​யாளர்​கள் நேற்று முன்​தினம் இரவு குண்டுக்​கட்​டாகக் கைது செய்​யப்​பட்​டனர். இந்​நிலை​யில், நேற்று அவர்​கள் அனை​வரும் விடுவிக்​கப்​பட்​டனர். சென்னை மாநகராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான தூய்​மைப் பணி தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதை எதிர்த்​தும், பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி​யும் 2 மண்டல தூய்​மைப் பணி​யாளர்​களில் என்​யூஎல்​எம் பிரிவைச் சேர்ந்​தவர்​கள் 13 நாட்​களாக ரிப்​பன் மாளிகை முன்பு தொடர் போராட்​டம் மேற்​கொண்​டனர்.

இதற்​கிடையே, போராட்​டம் என்ற பெயரில் நடை​பாதை, சாலையை மறிப்​பதை ஒரு​போதும்அனு​ம​திக்க முடி​யாது என கருத்து தெரி​வித்த உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வு, ரிப்​பன் மாளிகை முன்​பாக போராட்​டம் நடத்தி வரும் தூய்​மைப் பணியாளர்களை உடனடி​யாக அங்​கிருந்து அப்​புறப்​படுத்த போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டது.

அதையடுத்​து, போராட்​டம் நடத்​திய தூய்​மைப் பணி​யாளர்​களைக் கலைந்து செல்​லு​மாறு காவல் துறை நேற்று முன்​தினம் மாலை அறி​வுறுத்​தி​யது. மேலும், நீதி​மன்ற உத்​தர​வைச் சுட்​டிக்​காட்டி கலைந்து செல்​லும்​படி போராட்​டக்​காரர்​களு​டன் போலீஸார் பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

ஆனால் யாரும் கலைந்து செல்​ல​வில்​லை. அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, சேகர்​பாபு ஆகியோர் போராட்​டக் குழு​வினருடன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்​கள். அதி​லும் உடன்​பாடு எட்​டப்​பட​வில்​லை.

இதையடுத்​து, போலீ​ஸார் கைது நடவடிக்​கை​யில் இறங்கினார்​கள். நேற்று முன்​தினம் நள்​ளிரவு 11.45 மணி​யள​வில் தூய்​மைப் பணி​யாளர்​களை போலீ​ஸார் குண்​டு​கட்​டாகத் தூக்கி கைது செய்​தனர். அப்​போது போலீ​ஸாருடன் அவர்​கள் வாக்​கு​வாதம் செய்து தள்​ளு​முள்​ளு​வில் ஈடு​பட்​டனர்.

பேருந்து கண்​ணாடி சேதம்: இதையடுத்​து, போராட்​டத்​தில் ஈடு​பட்ட 700 பெண்​கள் உட்பட சுமார் 950 பேரை கைது செய்து 30 மாநகர அரசு பேருந்​துகள் மூலம் சைதாப்​பேட்​டை, வேளச்​சேரி, நீலாங்​கரை, தரமணி, தாம்​பரம் உட்பட 12 மண்​டபம் மற்​றும் சமூக நலக்​கூடங்​களுக்கு போலீ​ஸார் அழைத்​துச் சென்று தங்க வைத்​தனர்.

செல்​லும் வழி​யில் போராட்​டக்​காரர்​கள் 12 பேருந்​துகளின் கண்​ணாடிகளை அடித்து உடைத்து சேதப்​படுத்தி உள்​ளனர். அதில் ஏற்பட்ட தள்​ளு​முள்​ளு​வில் பெண் போலீ​ஸார் ஒரு​வருக்கு காயம் ஏற்​பட்​டது. இந்த சம்​பவம் குறித்து பெரியமேடு போலீ​ஸார் வழக்குப்​ப​திவு செய்​துள்​ளனர்.

கைது செய்து மண்​டபங்​களில்தங்க வைக்​கப்​பட்​டிருந்த தூய்மை பணி​யாளர்​களுக்கு நேற்று முன்​தினம் இரவு போலீ​ஸார் உணவு வழங்​கினர். நேற்று காலை அவர்​களைக் கலைந்து செல்​லு​மாறு போலீ​ஸார் அறி​வுறுத்​தினர்.ஆனால் யாரும் கலைந்து செல்​லாமல் அங்​கேயே இருந்​தனர்.

இதையடுத்து மாலை 5 மணிக்கு மேல் மண்​டபம் மற்​றும் சமு​தாய நலக்​கூடங்​களில் இருந்து தூய்மை பணி​யாளர்​கள் அனை​வரும் விடுவிக்​கப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், சென்னை மாநக​ராட்சி ரிப்​பன் மாளிகை உள்ளே மற்​றும் வெளியே தூய்​மைப் பணி​யாளர்​கள் மீண்​டும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டு​விடக் கூடாது என்​ப​தற்​காக 100-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் குவிக்​கப்​பட்டு கண்​காணிப்பு அதி​கரிக்​கப்​பட்​டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *