மாணவர்​கள் பள்​ளிக்கு இரு சக்கர வாக​னங்​களில் வந்​தால், வாக​னத்​தைப் பறி​முதல் செய்து பெற்​றோரை அழைத்து தக்க அறி​வுரை வழங்கி பெற்​றோரிடம் ஒப்​படைக்க வேண்​டும் – பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!!

சென்னை: ​
பள்​ளிக் கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்பி உள்ள சுற்​றறிக்​கை:

பள்ளி மாணவர்​கள் மோட்​டார் வாக​னங்​கள் பயன்​படுத்​து​வது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்​கு​மாறு போக்​கு​வரத்து மற்​றும் சாலைப் பாது​காப்பு ஆணை​யரகம் கடிதம் மூலம் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

அதனடிப்​படை​யில், பின்​வரும் அறி​வுரைகளை தலைமை ஆசிரியர்​கள், அனைத்து மாணவர்​களுக்​கும் வழங்க முதன்மை கல்வி அலு​வலர்​கள் அறி​வுறுத்த வேண்​டும்.

அதன்​படி, சாலை பாது​காப்பு மன்​றம் அனைத்து பள்​ளி​களி​லும் ஏற்​படுத்த வேண்​டும். இந்த மன்​றத்​துக்கு உடற்​கல்வி ஆசிரியர்​கள் தலை​வ​ராக இருந்து செயல்பட வேண்​டும்.

காலை வழி​பாட்டு கூடு​கை​யில், ஒவ்​வொரு நாளும் சாலை பாது​காப்பு குறித்த ஒரு கருத்தை பகிர வேண்​டும்.

என்​சிசி, என்​எஸ்​எஸ், சாரணர் இயக்​கம், இளஞ்​செஞ்​சிலுவை சங்க மாணவர்​களுக்கு போக்​கு​வரத்​துக் காவல்​துறை மூலம், சாலை விதி​கள் குறித்த பயிற்​சி​யும், போக்​கு​வரத்தை சீர் செய்​தலில் அவ்​வப்​போது ஈடு​படுத்​த​வும் செய்​ய​லாம்.

தலைக்​கவசம் அணிவதை வலி​யுறுத்​தி, பேரணி​கள், விழிப்​புணர்வு நாடகங்​களை​யும் நடத்த வேண்​டும்.

மாணவர்​கள் பள்​ளிக்கு இரு சக்கர வாக​னங்​களில் வந்​தால், வாக​னத்​தைப் பறி​முதல் செய்து பெற்​றோரை அழைத்து தக்க அறி​வுரை வழங்கி பெற்​றோரிடம் ஒப்​படைக்க வேண்​டும்.

பள்​ளிக்கு வெளி​யில் மாணவர்கள் இரு சக்கர வாக​னங்​களை ஓட்டி செல்​வதை தடுக்க தேவை​யான அறி​வுரைகளை காலை வணக்க கூட்​டத்​தில் வழங்​குதல் வேண்​டும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *