ஆட்​சிக்கு வந்து விட்​ட​தால் தவெக​வினர் சட்ட ஒழுங்கு பிரச்​சினையை தங்​கள் கையில் எடுத்​துக் கொள்​ளக் கூடாது – பிரேமலதா கருத்து!!

திருவாரூர்:
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆலங்​குடி​யில் குரு பகவான் சந்​நி​தி​யில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது:

தமிழக அரசு அறி​வித்த விவ​சாயக் கடன் தள்​ளு​படி அறி​விப்பு திருப்தி இல்லை என்​ப​தால் தமிழகம் முழு​வதும் விவ​சா​யிகள் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கிறார்​கள். எனவே, விவ​சா​யிகளின் கடன்​கள் முழு​வதை​யும் தள்​ளு​படி செய்ய வேண்​டும்.

கும்​பகோணத்​தில் போலீஸ் அதி​காரி​யின் கையை முறுக்கி ஆளுங்​கட்​சி​யினர் அராஜகம் செய்​துள்​ளனர்.

ஆட்​சிக்கு வந்து விட்​ட​தால் தவெக​வினர் சட்ட ஒழுங்கு பிரச்​சினையை தங்​கள் கையில் எடுத்​துக் கொள்​ளக் கூடாது.

தமிழகம் முழு​வதும் பாலியல் வன்​கொடுமை சம்​ப வங்​கள் நடந்து வரு​கின்​றன. சிறுமிகள் முதல் வயதான பெண்​கள் வரை பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

ஆட்​சிக்கு வந்து 6 மாதம் அவகாசம் கொடுப்​போம் என்​ப​தில் மாற்​றுக் கருத்து இல்​லை.

ஆனால், அதே நேரத்​தில் அந்த 6 மாதங்​களுக்​குள் அதி​களவி​லான பாலியல் பிரச்​சினை​களும், கொலை சம்​பவங்​களும் நிகழ்ந்து விடக்​கூ​டாது.

பாலியல் சம்​பவங்​கள் நடை​பெறாமல் தடுக்க வேண்​டும் எனில் அரபு நாடு​களில் தண்​டனை கொடுப்​பது போல, பொது​மக்​கள் கூடும் இடத்​தில் வைத்து தண்​டனை கொடுக்க வேண்​டும் அல்​லது என்​க​வுன்ட்​டர் செய்ய வேண்​டும். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *