தமிழகம் முழு​வதும் ரூ.3,766 கோடி​யில் 28,551 அடுக்குமாடிக் குடி​யிருப்​பு​கள் கட்​டப்​பட்டு வரு​வ​தாக அமைச்​சர் ப.ராஜ்கு​மார் தகவல்!!

சென்னை:
தமிழகம் முழு​வதும் ரூ.3,766 கோடி​யில் 28,551 அடுக்குமாடிக் குடி​யிருப்​பு​கள் கட்​டப்​பட்டு வரு​வ​தாக அமைச்​சர் ப.ராஜ்கு​மார் தெரி​வித்​தார்.

தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரியப் பணி​கள் குறித்த ஆலோ​சனைக் கூட்​டம் சென்னை சேப்​பாக்​கத்​தில் உள்ள அதன் தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் வீட்​டு​வச​தித் துறை அமைச்​சர் ப.ராஜ்கு​மார், செயலர் இரா.கிர்​லோஷ் குமார், தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யத்​தின் தலை​வர் கு.ப.கிருஷ்ணன், மேலாண்மை இயக்​குநர் ஸ்ரேயா பி.சிங் மற்​றும் துறை சார்ந்த அலு​வலர்​கள் பலர் பங்​கேற்​றனர்.

கூட்​டத்​தில் அமைச்​சர் ராஜ்கு​மார் பேசி​ய​தாவது: வாரி​யம் சார்​பில் தமிழகம் முழு​வதும் ரூ.3,766 கோடி​யில் 28,551 அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன.

இதில் சென்​னை​யில் ரூ.1,230 கோடி​யில் 7,179 குடி​யிருப்​பு​களும், இதர மாவட்​டங்​களில் ரூ.2,535 கோடி​யில் 21,372 குடி​யிருப்​பு​களும் இடம்​பெறுகின்​றன.

அதே​போல் ஆசிய வளர்ச்சி வங்கி திட்​டத்​தின் கீழ் ரூ.1,030 கோடி​யில் 5,457 அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன.

மேலும் ரூ.210 கோடி​யில் 215 திட்​டப்​பகு​தி​களில் புனரமைப்​புப் பணி​களும் நடை​பெற்று வரு​கின்​றன.

நலிந்த மக்​களுக்​காக கட்​டப்​பட்டு வரும் குடி​யிருப்​பு​களை நல்ல தரத்​துடன் உரு​வாக்கி விரை​வாக வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *