தவெக பெண் தொண்​டர்​களை இழி​வாக பேசி​ய​தாக பொன்​ராஜ் மீது பதி​யப்​பட்ட வழக்​கு​களில் இறுதி அறிக்கை தாக்​கல் செய்ய தடை நீட்டிப்பு!!

சென்னை:
தவெக பெண் தொண்​டர்​களை இழி​வாக பேசி​ய​தாக பொன்​ராஜ் மீது பதி​யப்​பட்ட வழக்​கு​களில் இறுதி அறிக்கை தாக்​கல் செய்ய விதிக்​கப்​பட்ட இடைக்​காலத் தடையை நீட்​டித்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழக முதல்​வரும், தவெக தலை​வரு​மான விஜய்க்கு ஆதர​வாக கருத்து தெரி​வித்த தவெக பெண் தொண்​டர்​களை இழி​வாகப் பேசி​ய​தாக, அரசி​யல் விமர்​சக​ரான பொன்​ராஜுக்கு எதி​ராக தற்​போதைய அமைச்​சர்​கள் நிர்​மல்​கு​மார், ராஜ்கு​மார் ஆகியோர் புகார் அளித்​தனர்.

அதன் அடிப்​படை​யில் சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸாரும், கடலூர் போலீ​ஸாரும் பொன்ராஜ் மீது வழக்​கு​களைப் பதிவு செய்​துள்​ளனர்.

இந்த இரு வழக்​கு​களை​யும் ரத்து செய்​யக் கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொன்​ராஜ் மனுக்​கள் தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனுக்​களை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், இந்த வழக்​கு​களில் இறுதி அறிக்கை தாக்​கல் செய்​யக்​கூ​டாது என இடைக்​கால தடை பிறப்​பித்​திருந்​தது.

இந்​நிலை​யில் இந்த மனுக்​கள் நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, இவ்வழக்​கில் பதில்​மனு தாக்​கல் செய்ய காவல்​துறை தரப்​பில் அவகாசம் கோரப்​பட்​டது.

அதையேற்ற நீதிப​தி, விசா​ரணையை ஜூலை 6-க்கு தள்​ளி​வைத்​துள்​ளார். அது​வரை இறுதி அறிக்கை தாக்​கல் செய்ய வி​திக்​கப்​பட்ட தடையை நீட்​டித்​து உத்​தர​விட்​டுள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *