திமுக மற்றும் விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை – மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கும் – திருமாவளவன்!!

சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.

முதலமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை திருமாவளவன் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  • அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பிய முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து, பாராட்டு தெரிவித்தேன்.
  • அமெரிக்கா சென்று பல்லாயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து வந்துள்ள முதலமைச்சருக்கு விசிக சார்பில் வாழ்த்து தெரிவித்தோம்.
  • மதுவிலக்கு தொடர்பான தேசிய கொள்கையை மத்திய அரசு உருவாக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
  • நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
  • மதுஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கும் என முதலமைச்சர் உறுதி அளித்தார். மாநாட்டில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்பார்கள் என முதலமைச்சர் கூறி உள்ளார்.
  • நாட்டில் பூரண மதுவிலக்கு தேவை என்ற கருத்து திமுகவுக்கும் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
  • இது கட்சிக்கான பிரச்சனையோ, கூட்டணிக்கான பிரச்சனையோ அல்ல. மதுவிலக்கு என்பது நாட்டுக்கான பிரச்சனை.
  • மதுவிலக்கு மாநாட்டையும் அரசியல் கூட்டணியையும் முடிச்சுப்போட வேண்டாம்.
  • அதிகார பகிர்வு குறித்து முதலமைச்சரிடம் பேசவில்லை.
  • திமுக மற்றும் விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. 2026 தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன என்று கூறினார்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *