தமிழ்நாடு கிரிக்கெட் சங்​கத்​தின் ​(டிஎன்​சிஏ) 94-வது ஆண்டு விழா!! சேப்​பாக்​கத்​தி​லுள்ள சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்​றது….

சென்னை:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்​கத்​தின் ​(டிஎன்​சிஏ) 94-வது ஆண்டு விழா சேப்​பாக்​கத்​தி​லுள்ள சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்​றது.

நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றவர்​களை டிஎன்​சிஏ தலை​வர் டி.ஜே. ஸ்ரீனிவாச​ராஜ் வரவேற்​றார்.

செய​லா​ளர் பகவான்​தாஸ் ராவ் ஆண்​டறிக்கை சமர்ப்​பித்து கடந்த ஆண்​டில் டிஎன்​சிஏ-​வின் செயல்​பாடு​கள், தமிழக அணி​யின் சாதனை விவரங்​களை விளக்கிப் பேசி​னார்.

இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரர் முரளி விஜய் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​று, வீரர், வீராங்​க​னை​களுக்கு பரிசுகளை வழங்​கிச் சிறப்​பித்​தார்.

மேலும் அவர் பேசும்​போது, அடிமட்ட அளவில் கிரிக்​கெட்டை கொண்டு சேர்க்க டிஎன்​சிஏ எடுத்து வரும் முயற்​சிகளை​யும், முன்​னெடுப்​புத் திட்​டங்​களை​யும் பாராட்டினார்.

பின்​னர் கடந்த 2025-26-ம் ஆண்​டில் பல்​வேறு, தேசிய மாநில போட்​டிகளில் வெற்றி பெற்ற அணி​கள், வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள், கோப்​பைகள் வழங்கி சிறப்பிக்கப்பட்​டன. டிஎன்​சிஏ பொருளாளர் ஆர்​.ரங்​க​ராஜன் நன்றி தெரி​வித்​தார்.

நிகழ்ச்​சி​யில் டிஎன்​சிஏ நிர்​வாகி​கள் சி.​மாரீஸ்​வரன், கே.ஸ்ரீ​ராம், எம்​.குமரேஷ், மாவட்ட சங்க நிர்வாகிகள், ஆட்சி மன்​றக்​குழு உறுப்​பினர்​கள்​ பங்​கேற்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *