மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்…..

மேஷம்

உறவினர்களின் உதவி கிட்டும் நாள். மறைமுக எதிர்ப்புகள் மாறும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். தொலைபேசி வழிச் செய்தி மகிழ்ச்சி தரும்.

ரிஷபம்

கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.

மிதுனம்

சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பெற்றோர் வழியில் உதவிகள் கிடைக்கும். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கடகம்

காலை நேரத்தில் கவனம் அதிகம் தேவை. நேற்றைய பிரச்சனை இன்றும் நீடிக்கும். வரவை விடச் செலவு கூடும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

சிம்மம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நட்பு பகையாகும். குடும்ப ஒற்றுமை குறையும். பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படும். மருத்துவ செலவு மனக்கலக்கம் தரும்.

கன்னி

கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிரதிபலன் பார்க்காமல் நீங்கள் செய்த உதவிக்கு நன்றி கிடைக்கும்.

துலாம்

யோகமான நாள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு நல்லவிதமாக நடைபெறும். புண்ணிய காரியங்களுக்காகச் செலவிடுவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்

சந்தோஷம் கூடும் நாள். சந்தித்த நண்பர்கள் மூலம் தொழில் வளர்ச்சி ஏற்படும். ஆன்மீகப் பயணம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். வருமானம் போதுமானதாக இருக்கும்.

தனுசு

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அனுபவஸ்தர்களின் ஆலோசனை தொழில் வளர்ச்சிக்கு கைகொடுக்கும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். செல்வாக்கு மேலோங்கும்.

மகரம்

விலையுயர்ந்த பொருட்களை வாங்கிமகிழும் நாள். வீடு, இடம் விற்பதில் இருந்த தடுமாற்றங்கள் அகலும். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியங்கள் இன்று நடைபெறும்.

கும்பம்

ஆற்றல் மிக்கவர்களைச் சந்தித்து ஆனந்தமடையும் நாள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார விருத்தி உண்டு. கைகூடும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.

மீனம்

நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். தேங்கிய காரியம் இன்று நடைபெறும். நீங்கள் தேடிச்செல்ல நினைத்தவர்கள் உங்கள் இல்லம் தேடிவருவர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *