மாணவர்​கள் எப்​போதும் நாட்​டின் ஒரு​மைப்​பாட்​டை​யும், ஒற்​றுமை​யை​யும் பாது​காக்க முன்வர வேண்​டும் – குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்!!

கோவை:
நாட்​டின் ஒரு​மைப்​பாட்​டை​யும், ஒற்​றுமை​யை​யும் பாது​காக்க மாணவர்​கள் முன்வர வேண்​டும் என, கோவை​யில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் தெரி​வித்​தார்.

கோவை பாப்​ப​நாயக்​கன்​பாளை​யத்​தில் உள்ள தனியார் மருத்​து​வ​மனை​யின் நர்​சிங் கல்​லூரி திறப்பு விழா​வில் கலந்து கொள்​ள​வும் திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி லிங்​கேஸ்​வரர் கோயி​லில் நடை​பெறும் சுந்​தரமூர்த்தி நாய​னார் குருபூஜை விழா​வில் பங்கேற்கவும் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்​தார்.

விமான நிலை​யத்​தில் அவரை ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர், பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத்​துறை அமைச்​சர் சம்​பத்​கு​மார் ஆகியோர் பூச்​செண்டு கொடுத்து வரவேற்​றனர். மேலும், மாவட்ட ஆட்​சி​யர் பவன்​கு​மார் கிரியப்​பனவர், மாநகர காவல் ஆணை​யர் என்​.கண்​ணன், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் பவன்​கு​மார் ரெட்​டி, மாநக​ராட்சி ஆணை​யர் கட்டா ரவிதேஜா, பாஜக தேசிய மகளிரணி தலை​வர் வானதி சீனி​வாசன் உள்​ளிட்​டோர் வரவேற்றனர்.

அவரிடம் செய்​தி​யாளர்​கள், டெல்​லி​யில் மாணவர்​கள் நடத்​தி வரும் போராட்​டம் குறித்​தும், அரசு பேச்​சு​வார்த்தை நடத்​தாதது குறித்​தும் கேள்வி எழுப்​பினர். அதற்கு பதில் அளித்து குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் கூறியதாவது:

இது ஒரு அரசி​யல் சார்ந்த கேள்​வி. இதற்கு உரிய பதிலை அரசி​யல் தலை​வர்​களே அளிப்​பார்​கள். மேலும், மாணவர்​கள் எப்​போதும் நாட்​டின் ஒரு​மைப்​பாட்​டை​யும், ஒற்​றுமை​யை​யும் பாது​காக்க முன்வர வேண்​டும்.

இந்​திய தேசம் இன்று சர்​வ​தேச சக்​தி​களுக்கு தகுந்த பதிலடி கொடுக்​கும் நிலை​யில் உள்​ளது என்​றால், அதற்கு நமது ஒற்​றுமையே முக்​கியக் காரணம். தமிழ்​நாட்​டில் தற்​போதைய புதிய அரசு செயல்​படு​வதற்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்​டும்’’ என்​றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *