நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து சென்னையில் மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்பினர் போராட்டம்!!

சென்னை:
நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்தும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத் தியும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே இளைஞர் பெருமன்றத்தினர் மற்றும் மாணவர்கள் நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திரண்டனர்.

சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல மாநிலக் கல்லூரி மற்றும் புதுக்கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலக வளாகத்தில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் 3-வது நாளாக தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர்.

திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிமாணவ, மாணவிகளும் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலரை போலீஸார் கைது செய்தனர்.

அண்ணாசாலையில் பெரியார் சிலை முன்பும் நேற்று மாலை போராட்டம் நடத்த மாணவர் அமைப்பினர் கொடியுடன் திரண்டனர். போலீஸார் சமாதானம் பேசி கலைந்து செல்ல வைத்தனர்.

தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் சாலை மறியல் நடந்தது. இதில் 2,500 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மட்டும் 250 பேர் கைதாகியுள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *