புதுடெல்லி:
சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (ஃபிடே) தலைவராக ரஷ்யாவின் அர்காடி துவோர்கோவிச் இருந்து வந்தார்.
இந்நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக அர்காடி துவோர்கோவிச் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனின் இந்த நடவடிக்கையால் அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்படவும், பயணத் தடைகள் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதனால் அர்காடி துவோர்கோவிச் ஃபிடே தலைவர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.
இதையடுத்து ஃபிடே அமைப்பின் துணைத் தலைவராக செயல்பட்டு வந்த ஐந்து முறை உலகச் சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், விதிமுறைகளின்படி தற்போது இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்த் 2022-ம் ஆண்டு முதல் ஃபிடே அமைப்பின் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.