நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி 9 ஆட்டத்தில் 430 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். ஒரு சதம், மூன்று அரை சதம் அடித்தார்.
ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் குறைவாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் கோலி 43 பந்தில் 51 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் கோலி அதிரடியாக விளையாட வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
கோலி தனது ஆட்டத்தின் நடுவில் அதிரடியை இழந்தது போல் தோன்றுகிறது. நீங்கள் இன்னிங்ஸின் 14 அல்லது 15-வது ஓவரில் அவுட் ஆனதும், உங்களது ஸ்டிரைக் ரேட் 118-ல் இருக்கிறது என்றால் அதை உங்களிடம் இருந்து அணி எதிர்பார்க்கவில்லை.
கோலியிடம் இருந்து ஒவ்வொரு ரன்னாக வருகிறது. உ
ங்களுக்கு அடுத்து தினேஷ் கார்த்திக், லோம்ரர் இருக்கிறார்கள். எனவே நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டும். இந்த அணுகுமுறைதான் பெங்களூரு அணிக்கு தேவை. கோலி ஆட்டத்தை தவறவிடுகிறார். அவர் பெரிய ஷாட்களை முயற்சிக்க வேண்டும் என்றார்.