நடிகர் விஜய்யின் 50 ஆவது பிறந்தநாளையொட்டி கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தளபதி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது 50வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
அவரது பிறந்த நாளை ஒட்டி பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும் கொண்டாட்டங்களை தவிர்த்து கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்ய நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான @actorvijay அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.