இன்ஸ்டாகிராம் வீடியோவில் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங் , சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், குர்கீரத் மான் ஆகியோர் மீது போலீசில் புகார்!!

இன்ஸ்டாகிராம் வீடியோவில் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங் , சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், குர்கீரத் மான் ஆகியோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ குறித்து ஹர்பஜன் தனது எக்ஸ் பதிவில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் (NCPEDP) செயல் இயக்குநர் அர்மான் அலி, அமர் காலனி போலீஸ் நிலைய அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரில் கிரிக்கெட் வீரர்களை தவிர மெட்டா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்தியா தேவநாதன் ஆகியோரும் அடங்குவர்.

புகாரின்படி, மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ஐ மீறி, இதுபோன்ற வீடியோவை பதிவேற்றம் செய்ய அனுமதித்ததாக கூறப்பட்டுள்ளது.

“இது தொடர்பாக அமர் காலனி போலீஸ் நிலையத்திற்கு புகார் கிடைத்துள்ளது. விசாரணைக்காக இந்த புகார் மாவட்ட இணைய பிரிவுக்கு அனுப்பப்படும்,” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *