ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி: கோல்கீப்பர் இன்றி விளையாடிய இந்தியா!!

ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதி சுற்றின் இரண்டாவது போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.

துவக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 7 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தில் 18 ஆவது மற்றும் 27 ஆவது நிமிடங்களில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடித்தனர்.

இதனால் இந்திய வீரர்கள் பதில் கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தினர். இதற்கு பலன் அளிக்கும் வகையில், போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் சுக்ஜீத் சிங் கோல் அடித்தார். இதனால், இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருந்தன.

இதையடுத்து இரு அணி வீரர்களும் மற்றொரு கோல் அடித்து வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் விளையாடினர். இறுதியில் போட்டியன் 54 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கோல் அடித்தார். இதனால், ஜெர்மனி 3 கோல்கள் என முன்னிலை பெற்றது.

போட்டி முடிய இரண்டு நிமிடங்கள் இருந்த நிலையில், இந்திய அணி கோல்கீப்பர் ஸ்ரீஜீஷ் வெளியேறினார். அவருககு பதிலாக மற்றொரு வீரர் அந்த இடத்திற்கு வந்தார். ஜெர்மணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற இந்திய வீரர்கள் கோல்கீப்பர் இல்லாமல் போராடினர். கடைசி நிமிடத்தில் பந்து இந்திய வீரர்கள் வசம் வந்தது.

அதனை லாவகமாக மறுபுறம் கொண்டு சென்றனர். இக்கட்டான சூழலில் பந்தை எதிர்கொண்ட ஷாம்ஷெர் சிங் அதனை கோல் போஸ்ட் நோக்கி வேகமாக அடித்தார். எனினும், பந்து போஸ்ட் வெளியே கடந்து சென்றது. இதனால் இந்திய அணியின் மூன்றாவது கோல் அடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதோடு போட்டியிலும் நேரம் முடிந்ததால், ஜெர்மனி அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்தியா அணி இன்று நடைபெற உள்ள வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *