மார்க்கண்டேயர் தமது பூசைக்காகக் கொண்டு வந்த பிஞ்சிலம் என்னும் சாதி மல்லிகைக் கொடி இங்கு தலமரமாக உள்ளது.
எனவே இத்தலம் “பிஞ்சிலவனம்” என்று அழைக்கப்படுகிறது.
இந்தச் சாதிமல்லி ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டிருக்கக் கூடியது.
இங்கே இம்மலர் இறைவனுக்கு மட்டுமே அணிவிக்கப்படுகிறது.
மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.
இந்த சாதி மல்லியின் ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் அது 1008 முறை அர்ச்சித்ததற்குச் சமம் என்று சொல்லப்படுகிறது.