திருப்பதியில் பக்தர்களுக்கு இலவசமாக திருநாமம் போட வசதி!!

திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் நெற்றியில் நாமத்துடன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்கள்.

கோவில் வளாகத்தில் திருநாமம் இட பக்தர்களிடம் ரூ.10 முதல் 20 வரை வசூல் செய்கிறார்கள். ஒரு சில பக்தர்களை அடாவடியாக வழிமறித்து நெற்றியில் திருநாமமிட்டு அதிக அளவில் பணத்தை பிடுங்குகிறார்கள்.

இதனை தவிர்க்க ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நெற்றியில் இலவசமாக திருநாமம் இட ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பதி மலையில் உள்ள ஏடிசி பகுதியில் இந்த திட்டத்தை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாராவ் நேற்று தொடங்கி வைத்தார்.

ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக நெற்றியில் திருநாமம் செலுத்தி வருகின்றனர். இதனால் இனிமேல் ரூ.10 கட்டணம் செலுத்தி திருநாமமிட வேண்டியது இல்லை.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆகஸ்டு மாதம் 22 லட்சத்து 42 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கோவில் உண்டியலில் ரூ.125 கோடியே 67 லட்சம் காணிக்கை வசூலாகி உள்ளது.

1 கோடியே 6 லட்சம் லட்டுகள் விற்பனையாகி உள்ளன. திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக நடந்து வரும் பக்தர்களுக்கு விரைவு திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் நடைமுறை மீண்டும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கும் அறைகளுக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு எத்தனை அறைகள் உள்ளன. எப்போது அறைகள் கிடைக்கும் என்பதை பற்றி விவரங்களை அறிவிப்புகள் மூலம் வெளியிட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *