தினமும் 200 தோப்புக்கரணம்… மயங்கிய 50 பள்ளி மாணவிகள்… நூதன தண்டனை வழங்கிய பள்ளி முதல்வர்!!

பள்ளிகளில் மாணவர்கள் ஒழுங்காக படிக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் தண்டனை வழங்குவது வழக்கம்.

அவரவர் நோக்கங்களுக்கு ஏற்ப தண்டனைகளின் உருவம், வடிவம் மாறும். இந்நிலையில், ஆந்திர மாநிலம் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பள்ளியில் வழங்கப்பட்ட நூதன தண்டனை சர்ச்சையாகி உள்ளது.

அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவிகள் ஒழுங்காக படிப்பதில்லை, உத்தரவுக்கு கீழ்படிய மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் பல எழுந்தன.

இதனையடுத்து, பள்ளி முதல்வர் மாணவிகளை அழைத்து அவர்களுக்கு தண்டனை வழங்கி உள்ளார். அனைவரையும் 3 நாட்கள் தொடர்ந்து 200 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என உத்தரவிட்டார்.

தோப்புக்கரணம் போட, போட மாணவிகள் ஒவ்வொருவரின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. சிலர் கால்கள் வீங்கியபடி கதற அப்போதும் தண்டனையை நிறுத்த முதல்வர் உத்தரவிடவில்லை என்று தெரிகிறது.

தொடர்ந்து மாணவிகள் தோப்புக்கரணம் போட்டதால் கிட்டத்தட்ட 50 மாணவிகள் அங்கேயே மயங்கி, சரிந்து விழுந்திருக்கின்றனர்.

இதைக்கண்டு அதிர்ந்த மற்ற ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். இந்த விவரம் அப்படியே பூதாகரமாக, ரம்பச்சோதவரம் எம்.எல்.ஏ., மிரியாலா ஸ்ரீசிரிஷ்யதேவிக்கு தகவல் பறந்திருக்கிறது.

இதுகுறித்து அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் மேலும் கூறி உள்ளதாவது; மாணவிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை மனித தன்மையற்ற செயல். ஒழுங்கீனம் என்பதற்காக இப்படி ஒரு தண்டனை அவசியமே இல்லை.

போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *