பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்க ளுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை வழங் கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !!

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி வெள்ளி பதக்கமும், மனிஷா மற்றும் நித்யஸ்ரீ ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர்.

அதேபோல் உயரம் தாண்டுதலில் சேலத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்று அசத்தியிருந்தார்.

இந்நிலையில் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் நான்கு பேரும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது வீராங்கனைகள் துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா மற்றும் விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு உயரிய ஊக்குத் தொகையாக 5 கோடி ரூபாய்க்காண காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *