நடிகர் ஜெயம் ரவியுடன் விவாகரத்துக்கு விருப்பம் இல்லை என்றும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன் – ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி விளக்கம்!!

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்து உள்ளார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார்.

இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, “இது எனது கவனத்துக்கு வராமலும் எனது ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு” என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.

ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விவாகரத்து விவகாரம் தொடர்பாக ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், நடிகர் ஜெயம் ரவியுடன் விவாகரத்துக்கு விருப்பம் இல்லை என்றும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன் என்று மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், “இத்தனை நாள் நான் அமைதியாக இருந்தது என் குற்றவுணர்ச்சி என்றோ, என் பலவீனம் என்றோ நினைக்க வேண்டாம்.

திருமணத்தின் புனிதத்தை நான் ஆழமாக மதிக்கிறேன், யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் விவாதங்களில் ஈடுபடமாட்டேன். எனது கவனம் எங்கள் குடும்பத்தின் நலனில் உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *