”சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்”!!

சென்னை:
கடந்த 2011-15 அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 47 பேர்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 3 மோசடி வழக்குகளை பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்.பி.,எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ஆஜராகினர். அவர்களுக்கு கூடுதல்குற்றப்பத்திரிக்கை நகல்கள்வழங்கப்பட்டன.

அப்போது நீதிபதி ஜி.ஜெயவேல், அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்ட பிறகு இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என தெரிவித்து விசாரணையை அக்.24-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *