முதல் 20 ஓவர் போட்டி: இந்தியா-வங்காளதேசம் நாளை மோதல்!!

குவாலியர்:
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன் வித்தியாசத்திலும், கான்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இந்தியா-வங்காளதேசம் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் மத்தியபிரேச மாநிலம் குவாலியரில் நாளை ( 6-ந் தேதி) நடக்கிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

இந்திய அணி கடந்த ஜூலை மாதம் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 20 ஓவர் தொடரில் 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று சாதித்தது. அதே நிலை இந்த தொடரிலும் நடைபெறலாம் என்று கருதப்படுகிறது.

சுப்மன்கில், பும்ரா உள்ளிட்டவர்களுக்கு 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீரர் மயங் யாதவ் மீது அவர் எதிர்பார்ப்பு உள்ளது.

டெஸ்ட் தொடரை இழந்த நஜூமுல் உசேன் ஷான்டோ தலைமையிலான வங்காளதேச அணிக்கு 20 ஓவர் தொடரிலாவது வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது.

இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் மோதுவது இது 15-வது முறையாகும். இதுவரை நடந்த 14 ஆட்டத்தில் இந்தியா 13-ல், வங்காளதேசம் 1-ல் வெற்றி பெற்றுள்ளன.

நாளை போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ரியான் பராக், ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ரிங்குசிங், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, மயங்க் யாதவ்.

வங்காளதேசம்: நஜூமுல் உசேன் ஷான்டோ (கேப்டன்), ஜாகர் அலி, லிட்டன்தாஸ், பர்வேஷ் உசேன், தன்ஜித் ஹசன், தவ்கீத் ஹிர்தோய், மெகிதி ஹசன், மகமதுல்லா, மிராஸ், முஷ்டாபிசுர் ரகுமான், ரகிபுல் ஹசன், நிஷந்த் உசேன், ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம், தக்ஷின் அகமது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *