ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஆதித்யா ராம் சூட்டிங் ஸ்பாட்டில் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு – ஷூட்டிங்கில் பங்கேற்ற ரஜினி!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 30-ந்தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு செய்தபோது இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகா தமனியில் (‘அயோர்டா’) அவருக்கு வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவருக்கு மகா தமனி வீக்கத்தை முற்றிலும் சரிசெய்யும் வகையில் ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் கண்காணிப்பை தொடர்ந்து, கடந்த 4-ந்தேதி உடல்நிலை குணமாகி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சிகிச்சைக்குப்பின்னர் ரஜினிகாந்த் வீட்டில் இருந்து ஓய்வு எடுத்து வந்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினி மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்றார்.

ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஆதித்யா ராம் சூட்டிங் ஸ்பாட்டில் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அங்கு மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு சண்டை காட்சிகள் சூட்டிங் நடைபெற்று வருகிறது. சண்டை காட்சிகளுக்கான சூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *