நாளை நடைபெறவுள்ள தவெக மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜய்யின் தீவிர ரசிகை ஒருவர் பெங்களூருவில் இருந்து இன்றே மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் இன்றே விழுப்புரம் மாவட்டத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.

அதற்கேற்ப மாநாட்டுத் திடலில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் விழுப்புரம், விக்கிரவாண்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.
தொண்டர்கள் பலரும் தவெக மாநாட்டுத்திடலில் இன்றே வந்து காத்திருக்கின்றனர். அந்தவகையில் விஜய்யின் தீவிர ரசிகை ஒருவர், பெங்களூருவில் இருந்து தவெக மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வரப்பொவதாக அறிவித்ததுமே, தான் தனது ஓட்டுநர் உரிமம், உறுப்பினர் அட்டை என அனைத்தையும் சென்னை முகவரிக்கு மாற்றி விட்டதாகவும், சென்னைக்கே குடிபெயர உள்ளதாகவும் தெரிவித்த அந்த ரசிகை தனது முதல் வாக்கை விஜய்க்காக அவரது தமிழக வெற்றிக் கழகத்துக்கு செலுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.
நாளைய மாநாட்டில் தவெக தலைவர் விஜய், கட்சியின் கொள்கைளை எதிர்ப்பார்த்து காத்திருப்பதாகவும், தான் விஜய்யின் தீவிர ரசிகை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் , விஜய் மக்களுக்காக செய்வார் என்கிற நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்ட அந்தப்பெண், ‘தளபதி’ என தனது கையில் டாட்டூ போட்டுள்ளார்.