கோவை,
கோவை பன்னாட்டு அரிமா சங்கம், கோவை ஸ்பின் சிட்டி அரிமா சங்கம் மற்றும் கோவை, மாநகர காவல் துறையுடன் இணைந்து ராயல் கேர் மருத்துவமனை காவல் துறையினருக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இலவச கல்லீரல் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாமை காவலர் மருத்துவமனை, PRS வளாகத்தில் சமீபத்தில் இரு நாட்கள் நடத்தியது.

இதில் Ln. V. ஆனந்தன், தலைவர்,ஸ்பின் சிட்டி அரிமா சங்கம், முன்னாள் பன்னாட்டு இயக்குனர் மற்றும் அகில இந்திய லயன்ஸ் கூட்டமைப்பு தலைவருமான Ln R.மதன கோபால், ஸ்பின் சிட்டி அரிமா சங்கத்தின் செயலாளர் Ln.Er.R.P.சுந்தர்ராஜன், மற்றும் பொருளாளர் Ln.K.நாகமாணிக்கம் முன்னிலையில் காவல் ஆணையர் திருV.பாலகிருஷ்ணன், I.P.S. மற்றும் ராயல் கேர் மருத்துவமனை தலைவர் Dr.K. மாதேஸ் வரன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.

ராயல் கேர் மருத்துவமனையின் மருத்துவர்கள் Dr.S.சவுண்டப்பன் மற்றும் Dr.A.சந்தீப் சந்திரசேகர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை இரு நாட்களும் வழக்கினர்.

டாக்டர் க.மாதேஸ்வரன் கூறும் பொழுது இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உயரம், எடை,இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு, இ.சி.ஜி. பைப்ரோ ஸ்கேன், சிறப்பு கல்லீரல் மருத்துவர்கள் ஆலோசனை மற்றும் உணவு ஆலோசகரின் ஆலோசனைகள் 250 க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டது என்று கூறினார்.

இம்முகாமில் விரிவான ஏற்பாட்டினை ராயல் கேர் மருத்துவமனை மற்றும் கோவை ஸ்பின் சிட்டி அரிமா சங்கம் செய்து இருந்தனர்.