ரோகித் சர்மா – ரித்திகா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2015 ஆண்டு ரித்திகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2018 ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், ரோகித் – ரித்திகா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ரோகித்திற்கு ஆண் குழந்தை பிறந்ததை ஒட்டி இணையத்தில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

ரித்திகா கர்ப்பமாக இருந்ததால் பார்டர்-கவாஸ்கர் கோப்பை பயிற்சிக்காக ரோகித் ஆஸ்திரேலியா செல்லாமல் தனது மனைவியுடன் இருந்தார். இந்நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததை ஒட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் பங்கேற்கமாட்டார் என்று சொல்லப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *