“கங்குவா படத்தை சினிமா துறையில் படைப்பாற்றல் மற்றும் புதுமையான முயற்சிகளை வரவேற்க வேண்டும்” அமலாபால் ஆதரவு!!

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் சமீபத்தில் திரைக்கு வந்து எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டது. சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா கங்குவா படத்துக்கு எதிரான விமர்சனங்களை கண்டித்தார்.

முதல் காட்சி முடியும் முன்பே திட்டமிட்டு எதிர்மறை விமர்சனங்களை பரப்புவதாகவும் விமர்சித்தார். இது பரபரப்பானது. இந்த நிலையில் ஜோதிகாவின் பதிவை நடிகை அமலாபால் தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் அமலாபால் வெளியிட்டுள்ள பதிவில், “கங்குவா படத்தை விமர்சிக்கின்றனர். சினிமா துறையில் படைப்பாற்றல் மற்றும் புதுமையான முயற்சிகளை வரவேற்க வேண்டும். தயாரிப்பாளரின் உழைப்பை பாராட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

டைரக்டர் சீனுராமசாமி வெளியிட்டுள்ள பதிவில், “கல்விப் பணிக்கு வெகுகாலம் நன்மை செய்து வரும் சூர்யா போன்றவர்களை தனிப்பட்ட அவதூறு செய்வது என்பது மிகவும் வருத்தத்தை தருகிறது. திரைத்துறைக்கும் அதனை சார்ந்த ஏனைய தொழில் முனைவோர்களுக்கும் பாதுகாப்பற்ற தன்மையை இது உணர்த்துகிறது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *