தமிழக ஐயப்ப பக்தர்​களுக்கு கேரளாவில் தக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்​படும் என்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – கேரள தலைமைச் செயலர் உறுதி!!

சென்னை:
சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்தர்​களுக்கு உதவும் வகையில், கேரள அரசு ‘சுவாமி சாட்​போட்’ என்ற பயண வழிகாட்டி செயலியை உருவாக்கியுள்​ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு: தமிழகத்​தில் இருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் ஆண்டு​தோறும் சென்று வருகின்​றனர். கடந்த ஆண்டு, சபரிமலைக்கு சென்ற தமிழகத்​தைச் சேர்ந்த பக்தர்கள் அடிப்படை வசதி​கள், பாது​காப்பு இன்றி சிரமப்​பட்​டதாக தகவல்கள் வந்தன.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டா​லின் உடனடி நடவடிக்கை எடுத்​தார். அதன்​படி, தமிழக தலைமைச் செயலர் பேசி​யதன் அடிப்​படை​யில், தமிழக ஐயப்ப பக்தர்​களுக்கு கேரளா​வில் தக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்​கப்​படும் என்றும் பாது​காப்பு உறுதி செய்​யப்​படும் என்றும் கேரள தலைமைச் செயலர் உறுதி​யளித்​தார்.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டில், ஐயப்ப பக்தர்கள் தமிழகத்​தில் இருந்து சபரிமலை செல்​வ​தில் இடர்​பாடுகள் ஏதேனும் ஏற்பாடு​மானால், தமிழக ஐயப்ப பக்தர்​களுக்கு உதவும் வகையில் ‘சுவாமி சாட்​போட்’ (Swami Chatbot) எனும் வாட்ஸ் அப் செயலி உருவாக்​கப்​பட்​டுள்ளது என்றும், அதன் மூலம் 24 மணி நேரமும் உதவிகள் பெற முடி​யும் என்றும் தமிழக அரசுக்கு கேரள மாநில பத்தனம்​திட்டா ஆட்சியர் கடிதம் எழுதி​யுள்​ளார்.

பல்லா​யிரக்​கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்​தில் கூடு​வ​தால், எதிர்​பாராத வகையில் விபத்துகள் ஏதேனும் ஏற்படு​மானால் அல்லது அவசர உதவிகள் எதுவும் தேவைப்​பட்​டால் அத்தகைய தருணங்​களில் ‘சுவாமி சாட்​போட்’ எனும் பயண வழிகாட்​டியை கைபேசி எண் 6238008000 மூலம் Hi என குறுஞ்​செய்தி அனுப்​பினால், உதவிகள் உடனே கிடைக்​கும்.

அதாவது, காவல்​துறை, தீயணைப்பு சேவை​கள், மருத்துவ உதவி​கள், வன அதிகாரி​கள், உணவு பாது​காப்​புக்கான அவசர தொலைபேசி எண்களை​யும் பெற்றுக் கொள்ள முடி​யும். இது அவசர நேரங்​களின்​போது உடனடி சேவைகளை பக்தர்​களுக்கு அளிக்​கிறது.

மேலும், இந்த ‘சுவாமி சாட்​போட்’ வாயிலாக சபரிமலைக்​குச் செல்​லும் தமிழக பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கும் நேரங்கள், பூஜை நேரங்கள், அருகிலுள்ள கோயில்கள், தங்குமிடங்கள், உணவகங்​கள், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகிய தகவல்களையும், கேரள மாநில அரசு போக்கு​வரத்​து கழக பேருந்​துகள் வந்து செல்லும் நேரங்​களையும் எளிதில் அறிந்து கொள்ள முடி​யும்.

சபரிமலைக்கு மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் வருகை தரும் தமிழகத்​தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், குறித்த காலத்தில் வந்து செல்​வதற்கு ஏற்ற வசதி​களை​யும், பாது​காப்பு மற்றும் கோயில் தொடர்பான சேவை​களை​யும் இந்த ‘சுவாமி சாட்​போட்” எளிதில் வழங்​கு​கிறது.

தமிழகத்​தில் இருந்து சபரிமலைக்​கு செல்​பவர்​கள் இந்த ​விவரங்களை அறிந்​து​கொண்டு சிரமம் இல்​லாமலும், பாது​காப்​பாக​வும் சென்று வரலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *