வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் கரையைக் கடக்கும் போது பெய்த கடுமையான மழையால் தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
புதுச்சேரியில் வீடுகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் உணவுப் பொருட்களும், பாத்திரங்களும் தண்ணீரில் மிதக்கின்றன. கனமழை பெய்த போது உடுத்திய உடையுடன் வெளியேறிய மக்கள் எந்த பொருளையும் எடுக்க முடியவில்லை என வேதனை தெரிவித்தனர்.
கூலி வேலைக்குச் சென்று வாழ்க்கை நடத்தி வரும் தங்களுக்கு அடுத்த வேலை உணவுக்கு இந்த மழை, வெள்ளம் சிரமத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர்கள் கூறினர். வாகனங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன
இந்நிலையில் புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.