சென்னை:
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு எதிராக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை(டிச. 12) ஒப்புதல் அளித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருந்த போதிலும்‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான இரு மசோதாக்களும் மக்களவையில் இன்று செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளன.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு எதிராக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அறிமுகம் செய்யப்படும் போதே எதிர்த்துப் பேச திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.