ஜப்பான் ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில். டிக்கெட் விற்பனை நிறுத்தம்!!

டோக்கியோ:
ஜப்பான் ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில். டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜப்பான் ஏர்லைன்ஸ் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெள்யிட்டுள்ள பதிவில், “உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 7.25 மணிக்கு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இது உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை சீரானதும் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு அது குறித்த தகவலைப் பகிர்கிறோம். சிரமத்துக்கு வருந்துகிறோம்.” என்று தெரிவித்தது.

பின்னர், மீண்டும் காலை 8.54 மணியளவில் வெளியிட்ட மற்றொரு பதிவில், “பிரச்சினை என்னவென்று அடையாளம் காணப்பட்டது. ஒரு ரவுட்டரை ஷட் டவுன் செய்துள்ளோம். இதனால் இன்றைக்கான உள்நாட்டு, சர்வதேச விமான டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தடங்கலுக்கு வருந்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் கடந்த ஆகஸ்ட் 1, 1951-ல் உருவானது. இது தனியார் நிறுவனமாக செயல்பட ஆரம்பித்தாலும் கூட 1987-ல் அரசுடைமையாக்கப்பட்டது. பின்னர் மீண்டும் இந்த விமான நிறுவனம் முற்றிலுமாக தனியார்மயமாக்கப்பட்டது. ஜப்பான் ஏர்லைன்ஸில் முக்கிய மையங்கள் டோக்கியோவின் நரிட்டா, ஹனேடா, ஒசாகா, கன்சாஸி விமான நிலையங்களில் உள்ளது.

பரபரப்பான போக்குவரத்தை கையாளும் ஜப்பான் ஏர்லைன்ஸில் ஏற்பட்டுள்ள இந்த சைபர் தாக்குதல் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *