சென்னை:
இன்று நடைபெறுவதாக இருந்த தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் கட்சி பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாக கவனித்து வருகிறார்.
இதனிடையே தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
இதனிடையே இன்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளின் ஆலோசனை நடைபெறவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று நடைபெறுவதாக இருந்த தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் திட்டமிட்டபடி நடைபெறும் என கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.