அந்த காலத்து நடிகைகளோடு ஒப்பிட்டால் இப்போதைய நடிகைகளுக்கு அனைத்து வசதிகள் இருந்தும் அதிகம் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் – நதியா…

சென்னை ;
தமிழ், மலையாள திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நதியா திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி அமெரிக்காவில் குடியேறினார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பி குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து நதியா அளித்துள்ள பேட்டியில், ”தமிழில் பூவே பூச்சூடவா” படம் மூலம் அறிமுகமாகி உயர்ந்த இடத்துக்கு வந்தேன்.

படப்பிடிப்புகளில் எனக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படவில்லை. அந்த காலத்தில் எனது தந்தையும் படப்பிடிப்புகளுக்கு வருவார்.

இப்போது மாதிரி அந்த காலத்தில் கேரவன் வசதி இல்லை. கிராமங்களில் யாரோ ஒருவரது வீட்டில்தான் உடை மாற்றுவோம். அந்த காலத்து நடிகைகளோடு ஒப்பிட்டால் இப்போதைய நடிகைகளுக்கு அனைத்து வசதிகள் இருந்தும் அதிகம் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் நம்மை கவனித்துக்கொண்டு இருக்கிறார் என்ற உணர்வோடு வாழவேண்டி இருக்கிறது.

சமூக வலைத்தளம், ஸ்மார்ட் போன்கள் காரணமாக பொது இடத்துக்கு வரும் நடிகைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலைமை உள்ளது.

நிலைமை இப்படி ஆகி விட்டதே என்று நடிகைகள் பயப்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தைரியமாக, அமைதியாக வாழ வேண்டும்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *