பொதுவாக உலர் பழங்களில் முக்கியமானது அத்தி மற்றும் பேரீச்சம் பழம் .அதில் இந்த பதிவில் பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் .
1.ஒரு க்ளாஸ் பாலில் சில பேரீச்சம் பழங்களை போட்டு குடித்தால் அதில் உள்ள ஊட்ட சத்துக்களும் ,விட்டமின்களும் நமக்கு செரிமானத்தைத் தூண்டுகிறது.
2.மேலும் இரவு முழுவதும் பாலில் இந்த பழங்களை ஊற வைத்து மறுநாள் சாப்பிட்டால் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.,
3.எலும்புகளை வலுவாக்கும்,தோலுக்கு நன்மை பயக்கும்,இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்கிறது,பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது,.
4.நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு பேரிச்சம்பழம் சிறந்த உணவு பொருளாகும்.
- இது குறைந்த ஜி.ஐ. அதாவது அதன் நுகர்வு இரத்தத்தில் இரத்த சர்க்கரையை வேகமாக அதிகரிக்காது. இதன்மூலம். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திட முடியும்.
6.தினமும் இரவில் பால் மற்றும் பேரிச்சம் பழம் உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கல்லை சுலபமாக போக்கலாம்