2வது டி20 போட்டி: பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து!!

நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட் தொடில் விளையாடி வருகிறது.

அந்த வகையில், இரு அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. கேப்டன் சல்மான் ஆஹா 28 பந்துகளில் 46 ரன்களை எடுத்தார். ஜேக்கப் டபி, பென் சீயர்ஸ், நீசம், சோதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்தது.

இதன் மூலம் அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிம் ஷெய்பர்ட் 22 பந்துகளில் 45 ரன்கள், ஆலன் 16 பந்தில் 38 ரன்களை அடித்தனர்.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *