சென்னை;
சென்னையில் ஏசி உள்பட அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் பயணிக்க ரூ. ரூ.2000 மாதாந்திர பயண அட்டையை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் 50 ஏசி பேருந்துகளும் பயன்பாட்டில் உள்ளது. இந்த ஏசி பேருந்துகள் பெரும்பாலும் கிளாம்பாக்கம், திருப்போரூர், நாவலூர் போன்ற ஐடி நிறுவனங்கள் அதிகமாக உள்ள பகுதிகளை மையப்படுத்தி இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது 1000 ரூபாய் கட்டணத்தில் மாதம் முழுவதும் ஏசி பேருந்துகள் நீங்கலாக மற்ற அனைத்து பேருந்துகளிலும் விருப்பம் போல் பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஏசி பேருந்துகளிலும் விருப்பம் போல் பயணம் செய்யும் திட்டத்தை கொண்டு வர பயணிகளிடையே தொடர் கோரிக்கை இருந்து வருகிறது.
விரைவில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 650 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அதில் குறிப்பாக 225 ஏசி பேருந்துகளும் வர உள்ளது.
தற்போது 75,000 பயணிகள் ஒரு மாதத்திற்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ரூ.1,000 செலுத்தி விருப்பம் போல் பயணம் செய்யும் அட்டையின் மூலம் ஏசி பேருந்து அல்லாத சாதாரண மற்றும் டீலக்ஸ் பேருந்துகளில் பயணம் செய்து வரும் நிலையில், சென்னையில் ஏசி உள்பட அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் பயணிக்க ரூ. ரூ.2000 மாதாந்திர பயண அட்டையை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.