சென்னை:
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் ஒரு நாடகம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தினார். சென்னையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்ற அதே நேரத்தில் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் ஒரு நாடகம். முல்லைப் பெரியாறு, மேகதாது பிரச்சினைகுறித்து இன்றைய கூட்டத்தில் முதல்வர் பேச வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டின் டாஸ்மாக் ஊழல் இந்தியாவையே உலுக்கக்கூடிய ஊழலாக இருக்கும். டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி வருகிறார்கள் பல்வேறு மாநிலங்களால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப் படவில்லை. தமிழ்நாட்டின் உரிமைகளை அண்டை மாநிலங்களிடம் முதல்வர் கோட்டை விட்டுள்ளார் என கூறினார்.