சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு – அண்ணாமலை கடும் விமர்சனம்!!

சென்னை:
சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக திருச்சியில் தமிழக பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நயனார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “திமுகவில் யாருமே படித்துவிட்டு அதிகாரத்திற்கு வரவில்லை; கூட்டுக் களவாணிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து, குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்ய போறாங்களாம். கர்மவீரர் காமராஜர், எம்ஜிஆர் போன்றோர் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்.

ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு. சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையை பற்றி பேசிக் கொண்டிரு கின்றனர்.

சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா? என கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *